காலைப் பனி
மனதை குளிர வைக்கும் நேரம்
உன் நினைவலைகளோடு - கையில்
தேநீர் கோப்பையுடன் வாசலில்......
நாம் பழகிய அந்த நாட்கள்
இன்று நினைவுகளாய் வந்து கதவைத் தட்டுகின்றன....!
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புகட்டியது நீ
எதிர்காலக் கனவுகளை காணச் செய்தவன் நீ
கால் விரல்களால் கோலம் போடக் காரணமாயிருந்தவன் நீ
நகங்களை கடிக்க வைத்தவன் நீ
நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்ற கேள்விக்கு பதில் நீ
வெட்கத்தால் கன்னங்கள் சிவக்க வைத்தாய்
உன் முத்தங்களால் என்னை மிளிரச் செய்தாய்
உன் குறும்புத் தனமான செய்கைகளால் மகிழ வைத்தாய்
மொத்தத்தில் வெறும் பிணமாக கிடந்த என்னை உயிர்ப்பித்து எழச் செய்தவனும் நீயே.......
ஆனால் இன்றோ என் ஒவ்வாரு துளி கண்ணீருக்கும் காரணமாகிவிட்டாய்....
எம் காதல் என்ற பாதையில் குருக்கிட்டவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்...................!!!!!!!!!!!!!!!!
இந்த நொடிப்பொழுது வரையிலும் நான் செய்த தவறு என்னவென்று தான் புரியவில்லை??????
- எனக்குள் நீ இருப்பதாய் உணர்ந்து உன்னை விட என்னை நேசித்ததா???
இல்லை,, உன் அனுமதி இன்றி உன்னை தினமும் என் மனதில் தரிசித்ததா???? - ஆம் பதில் தொலை தூரத்தில்.........
இன்றும்
உன் பார்வைகள் என் கண்களில் தாண்டவம் ஆட..
என்னை செல்லமாய் அழைக்கும் உன் குரல் காதுகளில் தேனிசை பாட..
உன் செல்லக் கொஞ்சல்கள் என் உடலை வருட..
இதயம் நிலத்தில் விழுந்த மீன் போல் தத்தளிகின்றது!
என்னை ஏன் பிரிந்தாய் என்ற கேள்விக்கு பதில் தெரியாத போதும்
என்னை பிரிந்து, என் இதயத்தை பிரிந்து சென்ற உன் இதயம் பதில் தெரிந்து கஷ்டப்படும் என நினைக்கையில்
( ஆம், எனக்கு நானே கூறும் ஆறுதல் ).........
-என் இதயத்தை பிரிந்து சென்ற உன் இதயம் பதில் தெரிந்து கஷ்டப்படும் என நினைக்கையில்,
ஒரு வித கலக்கம் என் மனதில்...
ஏனெனில் இப்போது
உன் இதயம் உன்னிடமல்லவா????
அது உனக்கும் வலிக்கும் அல்லவா????
உணர்ந்தேன்............!!!!!!
இதய வலிகளுக்கு காதல் ஓர் அழைப்பிதழ்!
இதயம் மட்டுமல்ல உடம்பின் ஒவ்வாரு பாகங்களும் வலிகளால் நொறுங்கினாலும்
இச் சோகம் எனக்கு மகிழ்ச்சி தான்.....
ஏனெனில்
சோகம் என் இதயம் முழுவதும் பரவி உன்னை மறக்க விடாது செய்துவிடுமல்லவா.......???
ஆம்.... சுகமாய் தான் இருகின்றதடா....!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment