Sunday, May 16, 2010

என் கண்ணாளனே...

இது நான் எழுதிய கவிதைகள் அல்ல
என் இதயம் எழுதிய கவிதை...!!
உன்னால் ஆளப்படுகின்ற
நீ இல்லாத ஒவ்வாரு நொடியும்
உன்னையே நினைத்திருக்கும்
என் இதயம் எழுதிய கவிதை...!!









  


மறந்து விட்டாயா என்று கேட்டாயே???
எப்படிடா மறப்பேன்???
சிரிக்கும் விழிகளை..
வதைக்கும் இதழ்களை..
அணைக்கும் கரங்களை..
சிதைக்கும் புன்னைகைகளை..
எப்படியடா மறப்பேன் நான்????














  

சில காலமாக எனக்குள் என்னையே ஒளித்துக் கொண்டிருந்தேன்...
இப்போது
எனக்குள் உன்னையும் ஒளித்துக் கொண்டிருக்கின்றேன் -
எனக்கே தெரியாமல்...
பொக்கிஷங்கள்
கிடைப்பதில்லை..
யார் கையிலும் கிடைப்பதில்லை...
உன்னைப் போல்...!
















என் இரவை அழகாக்குவது
நிலவு மட்டும் அல்ல
நீயும் தான்!
நிலவு ஒளியால்...
நீ மொழியால்...
பசி வந்தால் பத்தும் பறந்து விடுவர் என்பர்..
ஆனால்
பத்து நிமிடம்
உன்னோடு பேசிக் கொண்டிருந்தால்
பசியும் பறந்து விடுகிறதே...

Wednesday, May 5, 2010

உன்னை காணாத பொழுதில்....

உன் பார்வையால் என்னை
தூரமாய் நின்று கைது செய்தாயடா..
உன் அன்பினாலே என்னை மூழ்கச் செய்துவிட்டு
மௌனம் கொண்டாயடா..

உயிரே என் மீது ஏன் சொல்லாமலே நுழைந்தாய்????????


தினமும் கனவிலே கரங்கள் தீண்டிவிட்டு

கலைந்து சென்றாயடா..
கணமும் பிரியாமல் கரங்கள் கோர்த்து
நாம் என்றும் வாழ்வோமடா...

உடலும் மறந்தேன் உதிரம் உறைந்தேன்

என்ன செய்தாயடா...
தினமும் தொலைந்தேன் தூக்கம் போனது
என்ன செய்தாயோ நீ...

உன்னை காணாமல் உறக்கமில்லாமல்

தவிக்க வைத்தாயடா..
நீ என்னை தாண்டிச் செல்லும்
ஒவ்வொரு நிமிஷமும்
என் வாழ்வில் வெளிச்சங்களே...
இரு மனம் இணைந்திட விதி சேர்த்து வைக்குமா...??

உயிரே என் மீது ஏன் சொல்லாமலே நுழைந்தாய்??


அனைத்தும் இழந்தேன்

அகதியாக்கினாய் அன்பின் முன்னாலே நீ..
இயங்க வைத்து விலகி நின்றாய்
விடையும் தாராயோ நீ..
உன் இதழின் அசைவிலே
ஒலிக்கும் இசை எந்தன் காதில் கேட்கின்றதே..
உன்னை காணாத பொழுதில்
இதயமோ இயங்க மறுக்கின்றதே....

Tuesday, May 4, 2010

பதினாறாம் வயதினிலே.....

மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்....
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு
கிளிக்கும் பயந்தது நினைவிருக்கின்றது....
கரப்பான் பூச்சிக்கு பயந்து ஊரையே கூட்டினேன் எட்டு வயதில்....
பன்னிரண்டாம் வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாட்கள் காய்ச்சல்....
பதினைந்தாம் வயதில் ஒருமுறை,
                   நாயிற்கு பயந்து இரண்டு தெரு சுற்றிச் சென்றிருகின்றேன்....

இன்று....

     பதினாறாம் வயதினிலே,
        உன் இதயச்சிறைக் கைதியாகி விடுவேனோ - என பயந்து
        தினம் தினம் கண்ணீரில் மூழ்கின்றேன்....

உன்னை கருவில் சுமந்த தாய் கூட எனைப் பார்த்து பொறாமைப் படுகிறாள்

இத்தனை பயமிருந்தும்
நான் உன்னை தினம் தினம் இதயத்தில் சுமக்கின்றேன் என.......!!!!!!!!!!!

முற்றுப்புள்ளி

மூன்று மணி நேர
தொலைபேசி உரையாடலின் பின்
முற்றுப்புள்ளியாய்
ஓர் முத்தம் கேட்டேன்.....
முற்றுப்புள்ளி ஏனோ காற்புள்ளி ஆனது
அந்த இரவில்...!!!!

காத்து நிற்கின்றேன்.....

நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும்
காதல் என்ற தீயினால் வெந்து கருகும் என் இதயம் படும் பாட்டை என்னவென்று கூற...???

கண்கள் உறங்க மறுக்கின்றன

செவிகள் கேட்க மறுக்கின்றன
நா பேச மாறுகின்றது
கைகள் கவிதைகளாய் எழுதுகின்றன
கால்கள் அக்கவிதைகளுக்கு மெட்டிசைகின்றன
மொத்தத்தில் என் ஒவ்வாரு உடல் அங்கங்களும்  என் கட்டுப்பாட்டிலில்லை...
ஏனெனில் இவற்றை கட்டுப்படுத்தும் என் உயிர் உன்னிடமல்லவா????

இப்போதெல்லாம் எத்திசை நோக்கினாலும் தெரிவது உன் முகம் தான்..

கண்களை மூடினாலும் நீ தான்..
எக்
குரல் கேட்டாலும் உன் குரல் போலவே ஒலிக்கின்றது..
மௌனங்களிலும் நீ தான்..
புத்தகங்களின் பக்கங்கள் எல்லாவற்றிலும் உன் பெயர் தான் அச்சடித்தாட் போல் தெரிகிறது..
கண்ணாடியில் தெரிவது நீ..
கடிகாரத்தில் தெரியும் முட்களும் நீ..
சூரியனிலும் உன் சிரித்த முகம்..
பூக்களிலும் உன் வாடா முகம்...
நான் உண்ணும் உணவில் நீ..
அருந்தும் நீரில் நீ..
படுக்கும் மெத்தையில் நீ..
அசையும் அசைவுகளில் நீ..
கேட்கும் பாடல்களில் நீ..
பார்க்கும் பார்வைகளில் நீ..
சிரிக்கையில் என் சந்தமாய் நீ..
நடக்கையில் என் நிழலாய் நீ..
எழுதுகையில் என் எழுத்தாய் நீ..
பேசும் போது என் தமிழாய் நீ..
காற்றில் வருவதும் உன் மூச்சு சுவாசம் தான்..

என் முதல் - முடிவு

          இன்பம் - துன்பம்
          சிரிப்பு - அழுகை
          உள் - புறம்
          இரகசியம் - பரகசியம்
          கனவு - நினைவு....  எல்லாமே நீ....
என் தலையணையும் நீ...... என் தலையிடியும் நீ தானடா..

என் விழிகள் அங்கும் இங்கும் தேடுகின்ற கலாபக் காதலனே

உன் மனச்சிறையில் எனை அடைத்த பாவியே
நாளங்களும் நாடிகளும் உன்னை மட்டுமே சுமந்து செல்கின்றன
என்னை ஆட்கொண்ட தலைவா,
என் சிந்தனை முழுக்க நீ.. நீ.. நீயே தான்....
என்ன மாயமோ தெரியவில்லை
புரியவுமில்லை.....!!!!!!!!!!!!!!!!!

காத்திருந்தால் ஒவ்வாரு
நிமிடங்களும் வருடங்களாய் கழியுமாம் - ஆனால் எனக்கோ
ஒவ்வாரு
நொடிகளும் யுகங்களாய் கழிகின்றன....
காலம் என்பது நகராமல் உன்னை நினைத்த படியே காத்து நிற்கின்றது கண்ணா....

அன்பானவனே..  இனிமையானவனே..

அழகா..  கள்வா.. மடையா..
என் உயிரே..
என் சுவாசமே..
நண்பா.. பகைவா..
ஆருயிரே.. கண்ணாளனே..  செல்லமே.. காதலே..
என் இருதயத் துடிப்பே..
மணவாளனே.. மன்மதனே..
என் கவிதையின் பொருளே..
எனக்குள் ஐக்கியம் ஆனவனே..
என்னவனே.. உன்னை நினைக்கையில் என் மனமும் மெய்யும் உணரும் இன்பங்கள் கோடி..

உன்னை தினமும்

       என் கண்களால் தரிசிக்க..
       என் விரல்களால் வருட..
       என் கைகளால் தழுவ..
       என் இதழ்களால் உன் இமை மூட..
       செல்லமாக கொஞ்ச.. திட்ட.. கஷ்டப்படுத்த..
உன் மார்பில் என் முகம் புதைக்க..
உன் முத்தங்களால் என் உடல் தீண்ட..
ஓர் உயிர் ஓர் உடல் ஆக நாம் சேர
எப்போது என் கரம் பிடிப்பாயடா ????

நீ என்னுடன் இல்லாத ஒவ்வாரு நொடியும் - காத்து நிற்கின்றேன்

கவிதைக்கு காத்து நிற்கும் வெள்ளைத் தாள்களாய்....