Tuesday, May 4, 2010

காத்து நிற்கின்றேன்.....

நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு நொடியும்
காதல் என்ற தீயினால் வெந்து கருகும் என் இதயம் படும் பாட்டை என்னவென்று கூற...???

கண்கள் உறங்க மறுக்கின்றன

செவிகள் கேட்க மறுக்கின்றன
நா பேச மாறுகின்றது
கைகள் கவிதைகளாய் எழுதுகின்றன
கால்கள் அக்கவிதைகளுக்கு மெட்டிசைகின்றன
மொத்தத்தில் என் ஒவ்வாரு உடல் அங்கங்களும்  என் கட்டுப்பாட்டிலில்லை...
ஏனெனில் இவற்றை கட்டுப்படுத்தும் என் உயிர் உன்னிடமல்லவா????

இப்போதெல்லாம் எத்திசை நோக்கினாலும் தெரிவது உன் முகம் தான்..

கண்களை மூடினாலும் நீ தான்..
எக்
குரல் கேட்டாலும் உன் குரல் போலவே ஒலிக்கின்றது..
மௌனங்களிலும் நீ தான்..
புத்தகங்களின் பக்கங்கள் எல்லாவற்றிலும் உன் பெயர் தான் அச்சடித்தாட் போல் தெரிகிறது..
கண்ணாடியில் தெரிவது நீ..
கடிகாரத்தில் தெரியும் முட்களும் நீ..
சூரியனிலும் உன் சிரித்த முகம்..
பூக்களிலும் உன் வாடா முகம்...
நான் உண்ணும் உணவில் நீ..
அருந்தும் நீரில் நீ..
படுக்கும் மெத்தையில் நீ..
அசையும் அசைவுகளில் நீ..
கேட்கும் பாடல்களில் நீ..
பார்க்கும் பார்வைகளில் நீ..
சிரிக்கையில் என் சந்தமாய் நீ..
நடக்கையில் என் நிழலாய் நீ..
எழுதுகையில் என் எழுத்தாய் நீ..
பேசும் போது என் தமிழாய் நீ..
காற்றில் வருவதும் உன் மூச்சு சுவாசம் தான்..

என் முதல் - முடிவு

          இன்பம் - துன்பம்
          சிரிப்பு - அழுகை
          உள் - புறம்
          இரகசியம் - பரகசியம்
          கனவு - நினைவு....  எல்லாமே நீ....
என் தலையணையும் நீ...... என் தலையிடியும் நீ தானடா..

என் விழிகள் அங்கும் இங்கும் தேடுகின்ற கலாபக் காதலனே

உன் மனச்சிறையில் எனை அடைத்த பாவியே
நாளங்களும் நாடிகளும் உன்னை மட்டுமே சுமந்து செல்கின்றன
என்னை ஆட்கொண்ட தலைவா,
என் சிந்தனை முழுக்க நீ.. நீ.. நீயே தான்....
என்ன மாயமோ தெரியவில்லை
புரியவுமில்லை.....!!!!!!!!!!!!!!!!!

காத்திருந்தால் ஒவ்வாரு
நிமிடங்களும் வருடங்களாய் கழியுமாம் - ஆனால் எனக்கோ
ஒவ்வாரு
நொடிகளும் யுகங்களாய் கழிகின்றன....
காலம் என்பது நகராமல் உன்னை நினைத்த படியே காத்து நிற்கின்றது கண்ணா....

அன்பானவனே..  இனிமையானவனே..

அழகா..  கள்வா.. மடையா..
என் உயிரே..
என் சுவாசமே..
நண்பா.. பகைவா..
ஆருயிரே.. கண்ணாளனே..  செல்லமே.. காதலே..
என் இருதயத் துடிப்பே..
மணவாளனே.. மன்மதனே..
என் கவிதையின் பொருளே..
எனக்குள் ஐக்கியம் ஆனவனே..
என்னவனே.. உன்னை நினைக்கையில் என் மனமும் மெய்யும் உணரும் இன்பங்கள் கோடி..

உன்னை தினமும்

       என் கண்களால் தரிசிக்க..
       என் விரல்களால் வருட..
       என் கைகளால் தழுவ..
       என் இதழ்களால் உன் இமை மூட..
       செல்லமாக கொஞ்ச.. திட்ட.. கஷ்டப்படுத்த..
உன் மார்பில் என் முகம் புதைக்க..
உன் முத்தங்களால் என் உடல் தீண்ட..
ஓர் உயிர் ஓர் உடல் ஆக நாம் சேர
எப்போது என் கரம் பிடிப்பாயடா ????

நீ என்னுடன் இல்லாத ஒவ்வாரு நொடியும் - காத்து நிற்கின்றேன்

கவிதைக்கு காத்து நிற்கும் வெள்ளைத் தாள்களாய்....

No comments:

Post a Comment